Loading...
 

கிளப் உருவாக்கம் - ஏன் கிளப் தொடங்க வேண்டும்

 

ஏன் கிளப் ஆரம்பிக்க வேண்டும்?

ஒரு கிளப்பை ஆரம்பிப்பது என்பது மகிழ்ச்சியளிக்கிற ஒரு பெரு முயற்சி:

  • இது தலைமைத்துவத்தைப் பற்றி உங்களுக்கு நிறைய கற்றுக் கொடுக்கும். தன்னார்வலர்கள் இடம்பெறும் சமூகத்தை வழிநடத்துவதை விட சவாலான காரியம் எதுவுமில்லை, இத்தகைய சூழலில் நீங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், அறிவுறுத்த வேண்டும் மற்றும் பணிகளை பகிர்ந்தளிக்க வேண்டும்.
  • நீங்கள் பலரின் வாழ்வில் நீடித்து நிற்கும் பலனளிக்கக்கூடிய பல விஷயங்களை ஏற்படுத்துவீர்கள். கிளப்புக்கு வெளியே நிறையச் செயல்திட்ட பணிகளிலும், Agora -வுக்குத் தொடர்பில்லாத சமூகத்தில் நிகழும் உண்மையான செயல்திட்டங்களுக்குத் தலைமை தாங்கி அந்த விஷயங்களில் ஈடுபடுவதையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம். நாங்கள் பயிற்றுவிக்கும் பொதுப் பேச்சாளர்கள் உண்மையில் ஆணித்தரமாக வெளியே சென்று பேச வேண்டும், நாங்கள் பயிற்சியளிக்கும் தலைவர்கள் அவர்களைச் சுற்றியுள்ள உலகில் உண்மையான, பலனளிக்கக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஒரு கிளப்பை ஆரம்பிப்பதன் மூலம், இந்த நல்லெண்ணத்தின் பலனாக நிகழும் அனைத்து மாற்றங்களுக்கும் நீங்கள் தொடக்கப் புள்ளியாக இருப்பீர்கள்.
  • நீங்கள் ஒரு துடிப்பான, மிகவும் ஆர்வமுடைய சமூகத்தின் ஒரு அங்கமாக இருப்பீர்கள். நீங்கள் சந்திக்கும், வழிநடத்தும் சில நபர்கள் நிபுணத்துவம் பெற்ற தொடர்புகளாக மாறக்கூடும், சிலர் நெருங்கிய நண்பர்களாகவும் மாறக்கூடும்.
  • ஒப்பிட்டுப் பார்க்கையில் Agora Speakers புதியது என்பதால், அநேகமாக நீங்கள் உங்கள் நகரத்திலோ அல்லது நாட்டிலோ ஒரு வரலாற்றை ஏற்படுத்தி, அந்தக் கிளப்பை ஆரம்பித்தவராக நீங்கள் அடையாளம் காணப்படுவீர்கள். எங்கள் பிரதிநிதிகளில் சிலருக்கு ஏற்கனவே நிகழ்ந்ததைப் போல, நீங்கள் வானொலி அல்லது தொலைக்காட்சியில் நேர்காணல் செய்யப்படலாம்.
  • நீங்கள் நிபுணத்துவம் மிக்க பதவிகள் அல்லது தலைமைத்துவம், மேலாண்மை அல்லது தகவல்தொடர்பு சம்பந்தப்பட்ட வேலைகளைத் தொடர வேண்டுமென்றால், இது உங்கள் திறமைகளை நிரூபிக்கும் அற்புதமான சான்றாக இருக்கலாம்.

 

Agora Speakers கோட்டா கினபாலு, மலேசியா
Agora Speakers கோட்டா கினபாலு, மலேசியா

 

உங்கள் நாட்டிலோ அல்லது மாநிலத்திலோ முதல் கிளப்பை நீங்கள் ஆரம்பித்தால், நீங்கள் Agora உடைய பிரதிநிதியாகவும் விண்ணப்பிக்க ஆசைப்படலாம்.

ஒரு கிளப்பை ஆரம்பிக்க, உங்களுக்கு வேண்டியதெல்லாம்:

  • கொஞ்சம் நேரம் மற்றும் ஆற்றல்.
  • தவறாமல் சந்திப்பில் கலந்துக்கொள்ள ஆர்வமுள்ள குறைந்தது 8 நபர்கள். (இந்த வழியில் விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு நிறைய தேவை இருப்பதால் இந்த இலக்கை பொதுவாக எளிதில் அடைந்து விடலாம்)
  • சந்திப்பு நடைபெறும் வளாகம் (நீங்கள் முற்றிலும் ஆன்லைன் கிளப்பைக் கொண்டிருக்க திட்டமிட்டால் தவிர)
  • வேறு ஏதேனும் பொதுச் சொற்பொழிவு கிளப்புகள் அமைப்புகளில் உங்களுக்கு முன் அனுபவம் ஏதும் இல்லை என்றால், நாங்கள் வழங்கும் ஆன்லைன் பயிற்சி உங்களுக்குக் கொஞ்சம் தேவைப்படும்.

 


Contributors to this page: shahul.hamid.nachiyar and agora .
Page last modified on Sunday May 30, 2021 22:03:00 CEST by shahul.hamid.nachiyar.